Home இலங்கைதமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்…

தமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


தமிழ் மக்கள் இனி யுத்தம் தொடர்பில் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்ட வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் யுத்தத்தை எதிர்க்கும் யுத்தத்தை நிராகரிக்கும் மக்களாக மாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மிகவும் அப்பாவியான வாழ்க்கை முறைமையக் கொண்டவர்களே யாழ்ப்பாணத்து மக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான முறையில் அவர்கள் அபிவிருத்தி நோக்கி நகர்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டில் யாழ் மக்களிடம் தேசிய ஒற்றுமை பிரதிபலிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More