குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களிடையே மெய்யான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஸ்திரமான சமாதானமும் ஒற்றுமையும் நிலவினாலேயே பொருளாதார ரீதியில் சுபீட்சத்தை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைதற்கான வழியை திறக்கும் புதிய அரசியல் சாசனத்திற்கான சகல தடைகளையும் சவால்களையும் வென்றெடுக்கக் கூடிய புத்தாண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார். மக்கள் சுய கௌரவத்துடன் வாழக்கூடிய ஆண்டாக அமையட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.