Home இலங்கைபொதுத் தேர்­தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே, புது­வ­ரு­டத்­தில் உள்ள ஒரே நோக்­கம்….

பொதுத் தேர்­தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே, புது­வ­ரு­டத்­தில் உள்ள ஒரே நோக்­கம்….

by admin

பொதுத் தேர்­தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே இநதப் புது­வ­ரு­டத்­தில் உள்ள ஒரே நோக்­கம் என முன்­னாள்­ ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். கால்ட்­டன் இல்­லத்­தில் நேற்று இடம்பெற்ற புது­வ­ரு­டக் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்துள்ளார்.

இந்த வரு­டம் தமக்கு மிக­வும் ஒரு நல்ல வரு­ட­மாக அமை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­பட ஆரம்­பித்­துள்­ளது எனத் தெரிவித்த அவர் அரசாங்கத்திற்குள்  ஐக்கியதேசயக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் புதிய பய­ணத்­துக்­கான ஆரம்ப அத்­தி­வா­ரம் போன்­றவை தற்­பொ­ழுது நிகழ்ந்­துள்­ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்­த­லுக்கு இன்­னும் காலம் இருக்­கி­றது என்­றா­லும் இந்த அர­சுக்­குப் பலம் இருக்­கு­மென்­றால், பயம் இல்­லை­யென்­றால் உட­ன­டி­யாக இந்த அர­சைக் கலைத்து நாடா­ளு­மன்ற தேர்­தல் ஒன்­றுக்­குப் போக­வேண்­டும் என்­பதே தமது புது­வ­ருட எதிர்­பார்ப்­பா­கக் காணப்­ப­டு­கி­றது எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More