குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேலின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உகண்டா தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வது தொடர்பில், இஸ்ரேல் உகண்டாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேலின் கோரிக்கைக்கு அமைய எரித்திரியா மற்றும் சூடானைச் சேர்ந்த 500 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உகண்டா தெரிவித்துள்ளது.
உகண்டாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை குடியேற்றுவது குறித்த பணிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முனைப்புக்களில் இஸ்ரேல் தீவிரவமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.