281
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹங்கேரி அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த விக்டர் ஒர்பன் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதியற்ற தேர்தல் முறைமை எனக் கூறி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் பிரதமருக்கு ஆதரவாகவும் இவ்வாறான போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது. ஒர்பன், ஐரோப்பாவின் அகதிக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love