மாலியில் ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தீவிரவாதிகள் ரொக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அதினமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை முகாமிட்டுள்ள நிலையில் அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில். நேற்று அந்த முகாம்கள் மீது தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வெடிகுண்டு நிரப்பிய 2 கார்களை முகாம்கள் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது எனவும் காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிரான்சை சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மாலியில் கடந்த 5 ஆண்டுகளில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 162 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது