சினிமா பிரதான செய்திகள்

இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கும் பி.சுசீலா

பி.சுசீலா 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி பல தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். அத்துடன் அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். இந்நிலையில், ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க இருக்கிறார்.

பி.சுசீலா. பாடல்கள் பாடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பி.சுசீலா, படக்குழுவினரின் வற்புறுத்தலின் பேரில் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.  பிக்பாஸ் ஜூலி நாயகியாக நடிக்கும் டாக்டர்.எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ் என்னும் படத்துக்குத்தான் அவர் இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் அனிதா பிறந்தநாள் அன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர் நீத்த அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. எஸ்.அஜய் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் கதையால் நெகிழ்ந்த பி.சுசீலா இந்தப் படத்திற்கு இசையமைக்க ஓகே சொல்லி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.