Home இந்தியாகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிரட்டப்பட்டார்…

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் மிரட்டப்பட்டார்…

by admin

கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஈடுபட்டுள்ளநிலையில், நேற்று முன்தினம் அவர் சென்ற காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்ற நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரச்சாரத்தினை முடுடித்து தனது காரில் திரும்பிக் கொண்டிருந்த பிரகாஷ் ராஜின் காரை 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர், முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிரகாஷ் ராஜை காரை விட்டு இறங்குமாறு பாஜகவினர் மிரட்டினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், அங்கு சென்று பிரச்சினையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More