குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதான விபத்துக்களில் காயமடைந்த 370 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 13 மற்றும் 14ம் ஆகிய திகதிகளில் இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் குறைவடைந்துள்ளது.
எவ்வாறெனினும்இ வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்