குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டம் அவசரமாகக் கூடி சுமார் 2 மணித்தியாலங்கள் வரை கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிரியாவில் மேற்கத்தைய நாடுகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதை ரஷ்யா விரும்பியதுடன், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவை சர்வதேச சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளுவதைக் காட்டுவதாகவும், ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதுவர் வாஸ்லி நெபென்ஸியா தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே, சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான தாக்குதல் நியாயமானவையென சுட்டிக்காட்டியுள்ளார்.