ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஆந்திரபிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனை வலியுறுத்தி அண்மையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியிருந்தது.
இந்தநிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி இன்று திங்கட்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஆந்திரபிரதேச பிரத்யேகா ஹோடா சாதனா சமிதி என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இந்த போராட்டத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் பெரும்பலான கடைகள் பூட்டிக்காணபடபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பையொட்டி ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.