177
தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியினை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மானின் நெருங்கிய சகாவுமாக மொறிஸ் என்பவர் விடுதலை செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் பல முக்கிய தாக்குதல்களின் சூத்திரதாரி என அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் மொறிஸ் இலங்கை சிறைச்சாலையொன்றில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love