141
யாழ்ப்பாணம் வலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பொது மக்களது காணிகளில் ஆபத்தான வெடி பொருட்கள் பல அகற்றப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி வடக்கில் 28 ஆண்டுகளாக இராணுவத்தினர் வசமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் மயிலிட்டி மேற்கு பகுதியில் உள்ள 683 ஏக்கர் காணிகளிலேயே மேற்குறிப்பிட்ட வெடி பொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் அகற்றப்படாமல் உள்ள இந்தவெடி பொருட்கள் அங்கிருந்து களவாடப்பட்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love