குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டுக்கு தற்போது ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதால், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீடு உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் மக்களும் தமது பணிகளை செய்தில்லை. அரசாங்கம் மக்களை சந்திக்க அஞ்சவில்லை என்றால், நாடாளுமன்ற தேர்தலை நடத்தி மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.