குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கீர்த்தி மிக்க பழமையான மரதன் ஓட்டப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியின் மகளிர் பிரிவில் தாதியொருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். 26 வயதான சாரா செல்லர்ஸ் (Sarah Sellers) என்ற தாதியே இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த மரதன் ஓட்டப் போட்டியில், இரண்டு தடவைகள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற டிசாரி லின்டன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். எனினும், தாதியான சாரா செல்லரின் வெற்றியே ஊடகங்களில் அதிகளவில் கொண்டாடப்படுகின்றது.
உடாஹ் சமூகத்தைச் சேர்ந்த சாரா, பங்கேற்ற இரண்டாவது மதரன் ஓட்டப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சாரா இரண்டு மணித்தியாலங்கள் நாற்பத்து நான்கு நிமிடங்கள் நான்கு செக்கன்களில் வெற்றி இலக்கு அடைந்துள்ளார். 185 டொலர் அனுமதிக் கட்டணத்தைச் செலுத்தி போட்டியில் பங்கேற்ற சாராவிற்கு, 75000 டொலர்கள் பரிசு பணமாக வழங்கப்பட்டுள்ளது. பரிசுப் பணத்தை தனதும் தனது கணவரினதும் கல்விச் செலவிற்காக ஒதுக்குவதாக சாரா தெரிவித்துள்ளார்.

The field of men’s elite runners leave the starting line in the 122nd Boston Marathon on Monday, April 16, 2018, in Hopkinton, Mass. (AP Photo/Steven Senne)