குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் ஓர் பொதுச் செயலாளாரின் கீழ் சுதந்திரக் கட்சி இயங்குவதனை அனுமதிக்க முடியாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தின் போது போது பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார்.