குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய பொது மக்களில் இன்றும 14415 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகிறது என கிளி நொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேறிய போது புதிய வீடுகள் மற்றும் திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 41846 வீடுகள் தேவையாக காணப்பட்டன. இதில் 35667 புதிய வீடுகளும், திருத்தம் செய்யப்பட வேண்டிய வீடுகள் 6179 வீடுகளும் காணப்பட்டன.
இதில் இன்று வரையா காலத்தில் 26564 வீடுகள் அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு 867 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே .இன்றும் 14415 வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது. எனமாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவ்வருடம் தேசிய ஒருமைபாட்டிற்றும் நல்லிணக்கத்திற்கான அமைச்சின் மூலம் 7000 வீடுகளும்,மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 50 வீடுகளும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் 171 வீடுகளும் கிடைக்கப்பெறவுள்ளது எனவும் அப்புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.