குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் நேற்று(17) இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஜம்பது இலட்சம் ரூபா என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பூநகரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது யாழ்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்ரிக் பொருள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கேரள கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்