184
அட்சய திருதியை தினமான இன்று புதன்கிழமை (18) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர். நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசுப் பொதிகளும் நகைக்கடை உரிமையாளர்களால் வழங்கப்படுகின்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love