குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேரின் அணி நேற்றிரவு மீண்டும் கூடி கலந்துரையாடியுள்ளது. இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக சுசில் பிரேமஜயந்த, டிலான் பெரேரா, லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் யோசனை ஒன்றை முன்வைக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.