குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவளிக்காத காரணத்தினாலேயே கூட்டு எதிர்க்கட்சி தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதனால், தனக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசியல் தேவையை கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
உலகில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும் எனவும் அதனை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக தமக்கு இருக்கும் திருப்தியின் காரணமாகவே தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.