இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இணையத்திருடர்கள் இணையதளத்தை முடக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த இணையதளங்கள் சீனாவைச் சேர்ந்த இணையத்திருடர்களால் முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு பின்னர் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே இணையம் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளமான ”சுப்ரீம் கோர்ட் ஒப் இந்தியா ‘ இன்று முடக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இணையதளத்தில் தகவல் பதியப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுபற்றி உச்ச நீதிமன்றம் தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனவும் இணையதளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது