Home உலகம்உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் குணமடைந்து விடுவேன் – நெய்மர்

by admin


ரஸ்யாவில் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன் தான் முழுமையாக குணமடைந்துவிடுவேன் என விடுவேன் என பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் கழகப் போட்டி ஒன்றின் போது நெய்மருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது குணமடைந்துவரும் அவர் காயம் மோசமானது என்பதால் ஆனால் ஓய்வு எடுத்து வருவதாகவும் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஸ்யாவில் ஜூன் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்குள் முழுமையாக குணமாகி விடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அதேவேளை மே 21 ம்திகதி ஆரம்பமாகவுள்ள தேசிய அணிக்கான பயிற்சி முகாமில் நெய்மார் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More