குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் மிகப் பெரிய நிதி மோசடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் அப்பாவி மக்கள் மீது வரிகளை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் பற்றி தற்போது பேசப்படுவதில்லை எனவும் அவர் காரணமாகவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்தது எனவும் மகிந்த கூறியுள்ளார்.
அடுத்த அரசாங்கம் பதவிக்கு வந்ததும் தற்போது அரசாங்கம் கொண்டு வந்துள்ள வருமானவரி சட்டத்தை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும். நாட்டின் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்தும் இவ்வாறு வருமான வரி சுமைகளை ஏற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.(