குளோபல் தமிழ்ச செய்தியாளர்
அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு கொண்டு வந்துள்ள சுங்க வரியை இரத்துச் செய்து, அதனை வழமை நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு அரசாங்கம் சுங்க வரியை விதிக்க எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, நாட்டின் தங்க தொழிற்துறை கடும் பாதிப்புகளை எதிர்நோக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு 15 வீத சுங்க வரியை அறிவிடுவது என நிதியமைச்சு அண்மையில் தீர்மானித்தது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் பெருந்தொகையான தங்கம் சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரியவந்ததை அடுத்தே நிதியமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்தது. நிதியமைச்சின் இந்த சுங்க வரி காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை 64 ஆயிரம் ரூபா வரை உயரும் என தங்க ஆபரண விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது