குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இன்றைய தினம் முதல் புதிய நடைமுறை அமுல்படுது;தப்பட உள்ளது. பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுளு;ளது. இது தொடர்பில், வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தகவல் வெளியிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்ட சட்டம் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அதற்கு சலுகைக்காலம் வழங்கப்பட்டு கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் சலுகை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, இந்த புதிய நடைமுறை ஏற்புடையதல்ல என முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.