குளோபல் தமிழச் செய்தியாளர்
சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு ரசாயன ஆயுதங்கள் தொடர்பான நிபுணர்கள் செல்வதில் தொடர்ந்தும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ரசாயன ஆயுத தடுப்பு குறித்த அமைப்பின் நிபுணர்கள் சிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியை இன்னமும் சென்றடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் நிபுணர்கள் கண்காணிப்பு நடாத்த உசிதமான இடமா என்பதனை உறுதி செய்ய வேண்டிய ஐக்கிய நாடுகள் அதிகாரிகளும், துரித கதியில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..
சம்பவ இடத்திற்கு சென்ற கண்காணிப்பு அதிகாரிகளுக்கு சிரிய அரசாங்க ஆதரவு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நிபுணர்கள் சுயாதீனமாக விசாரணைகளை நடத்துவதற்கு சிரிய அரசாங்கம் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ் தெரிவித்துள்ளார்.