மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கும் நிகழ்வில் விருந்தினர்கள் உரையின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உரை நிகழ்த்தி முடிந்த நிலையில் மன்னார் நகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் பெண் உறுப்பினர்கள் இருவர் உட்;பட நான்கு உறுப்பினர்களும் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளனர்.
-குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் செயலாளர் எஸ்.எல்.லெம்பேட் தலைமையில் இடம் பெற்றது.
காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் உள்ள தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மாலை அணிவித்தார்.
-இதனைத்தொடர்ந்து தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு முன்-மன்னார் நகர சபையின் புதிய தலைவர்,உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மங்கள வாத்தியத்துடன் மன்னார் நகர சபை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
-இதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு விருந்தினர்கள் உரை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரீமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், மற்றும் மன்னார், மாந்தை மேற்கு,நானாட்டான் மற்றும் முசலி பிரதேச சபைகளின் தலைவர்கள் உப தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் உரையின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உரை நிகழ்த்தி முடிந்த நிலையில் மன்னார் நகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் பெண் உறுப்பினர்கள் இருவர் உற்பட நான்கு உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபை,மாந்தை மேற்கு பிரதேச சபை,மற்றும் முசலி பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்புச் செய்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்பிலும் குறிப்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தொடர்பாகவும் உரை நிகழ்த்தியமையை கண்டித்தே அவர்கள் மண்டபத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர். எனினும் குறித்த நிகழ்வு எவ்வித தடையும் இன்றிய சிறப்பான முறையில் நிறைவடைத்தமை குறிப்பிடத்தக்கது.