குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான சிகப்பு எச்சரிக்கை வரவேற்கப்பட வேண்டியது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைய சர்வதேச காவல்துறையினர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னரே, அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இது கவனிக்கப்பட வேண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.