குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக அந்நாட்டு ஜனநாயகக் கட்சி வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குழப்பியதாகத் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரஸ்யா, தற்போதைய ஜனாதிபதி டொனால்;ட் ட்ராம்பின் தேர்தல் பிரச்சாரக்குழு மற்றும் விக்கிலீக்ஸ் ஆகியனவற்றுக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் டொhல்ட் ட்ராம்பும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்ரனும் போட்டியிட்டிருந்தனர். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரி கிளின்ரனுக்கு திட்மிட்ட அடிப்படையில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேன்ஹட்டன் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குத் ஜனநாயகக் கட்சியின் கணனி கட்டமைப்பிற்குள் பிரவேசித்து, அவதூறுப் பிரச்சாரங்களை செய்தே ட்ராம்ப் தேர்தலில் வெற்றியீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.