பாலஸ்தீனை சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிகள் இயக்க உறுப்பினருமான பாதி அல்-பட்ஷ் என்பவர் மலேசியாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பாதி அல்-பட்ஷ் கடந்த சில ஆண்டுகளாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருவதுடன் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்ற வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகிலுள்ள வீதியில் அவர் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பின்னணியில் இயங்கியுள்ளது என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை வெளிநாட்டு உளவு அமைப்புக்கு இந்த கொலையில் தொடர்பில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால், மொசாட் மீதான சந்தேகப்பார்வை அதிகரித்துள்ளது.