151
கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம் –
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை தற்போது எல்லோரும் மறந்துவிட்டனர். எனவேதான் நாம் அவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்கி 428 நாளில் அவர்களுடன் இணைந்துள்ளோம் இதன் போது எங்களை விமர்சிக்கின்ற இந்த நேரத்திலாவது இவர்களின் போராட்டம் ஞாபகத்திற்கு வரட்டும் என கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
428 (சனிக்கிழமை) நாளாக கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றத்தினர்
428 நாளில் உங்களுடன் கைகோர்கின்றோம் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளே உங்களை உங்களை அனைவரும் மறந்து விட்டனர் ஆனால் சமூக வலைத்தளங்களில் எங்களை விமர்சிக்க பலா் உள்ளனா் எங்களை அவர்கள் விமர்சிக்கின்ற நேரத்திலாவது மறந்து போனவர்கள் மத்தியில் நீங்கள் ஒரு கணம் நினைத்துப் பார்க்கப்படுவீர்கள் என எழுதப்பட்ட பதாதை ஒன்றையும் ஏந்தியிருந்தனர்.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Spread the love