Home இலங்கை லசந்த விக்கிரமதுங்க படுகொலை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை…

லசந்த விக்கிரமதுங்க படுகொலை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை…

by admin

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைத் தொடர்பில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திர வகிஸ்டாவிடம், விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லசந்த படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற, முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர், பிரசன்ன நாணயக்காரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களுக்கு அமைய, சந்திர வகிஸ்டாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லசந்த விக்கிரதுங்கவின் குறிப்புப் புத்தகம் ஒன்றை, சந்திர வகிஸ்டாவுக்கு தாம் வழங்கியதாக பிரசன்ன நாணயக்கார விசாரணைகளின்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More