Home சினிமா விவேக் படத்தில் யோகி பியின் எழுச்சி மிகுந்த பாடல்

விவேக் படத்தில் யோகி பியின் எழுச்சி மிகுந்த பாடல்

by admin



விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தில் பிரபல பாடகர் யோகி பி பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்தப் படத்தை  வி.பி.விஜி இயக்கியுள்ளார். வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’ படத்தில் விவேக், தேவயானியுடன் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கார்த்திக் ராம் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளதுடன் மிராக்கிள் மைக்கேல்ராஜ் சண்டை பயிற்சி அளித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கி உள்ளார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல பாடகர் யோகி பி இணைந்துள்ளார். இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். இந்தப் பாடல் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More