193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஸ் கிரிக்கட் வீராங்கனை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 14000 ஐஸ் என்னும் போதை மாத்திரைகளுடன் இந்த வீராங்கனை கைது செய்யப்பட்டுள்ளார். முதல்தர போட்டிகளில் விளையாடும் வீராங்கனையான நஸ்ரீன்கான் முக்தா (Nazreen Khan Mukta) என்னும் வீராங்கனையே இவ்வாறு கைது செய்யபபட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love