கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோதிய விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் இன்று வெள்ளைவான் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டு 16 பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வாகனத்தை செலுத்திய சாரதி அந்த இடத்தில் இருந்து தப்பியோடிதாக கூறப்பட்ட பொதும் அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக கனேடிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதே வேளை இந்த சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வேளை இந்த வெள்ளைவான் மோதுகை ஒரு விபத்தா, திட்டமிட்ட தாக்குதலா, அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலா என்பது குறித்து கனேடிய காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய நேரம் பிற்பகல் 1.30ற்கும் – GMT 18.30 ற்கும் இடம்பெற்ற இந்த விபத்து பிரெஞ் அவனியூ பகுதியில் குறிப்பாக பிரித்தானிய வெளியுறவு செயலர் பொரிஸ் யோன்சன் உள்ளிட்ட G7 அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ள மகாநாடு இடம்பெறும் இடத்தில் இருந்து 18 மைல் தொலைவு என தெரிவிக்கப்படுகிறது. இந்த மநாட்டில் பயங்கரவாதம், மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக கூறப்படுகிறது.