இந்தியா முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில் 8 பல்கலைக்கழகங்கள் தலைநகர் டெல்லியில் மட்டும் செயல்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
பல மாணவர்கள் பல்கலைக் கழகங்கள் போலியானவையா அல்லது உண்மையானதா எனத்தெரியாமல் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திச் சேர்ந்து பின்னர் தெரியவரும் போது பணத்தை பெறமுடியாத சூழல் ஏற்படுகிறது. இதை முன்கூடியே மாணவர்களுக்கு அறிவிக்கும் வகையில், போலி பல்கலைக்கழங்கள் குறித்த பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு இன்று வெளியிட்டுள்ளது.
பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அங்கீகாரம் பெறாமல் 24 பல்கலைக்கழகங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டப்படிசெல்லாது இந்த 24 பல்கலைக்கழங்கள் போலியானவை, இந்த பல்கலையில்படித்து பட்டம் வாங்கினால் அது செல்லாது என அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த 24 பல்கலைக்கழகங்களில் டெல்லியில் உள்ள பட்டியல்கள் தரப்பட்டுள்ளன.
1. கமர்ஷியல் யுனிவர்சிட்டி (டெல்லி)
2. ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி
3. யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி
4. வொகேஷனல் யுனிவர்சிட்டி
5. ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி
6. இந்தியன் இன்ஸ்டியூசன் ஆப் சயன்ஸ் அன்ட் என்ஜினியரிங்
7. விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாய்மெண்ட்
8. ஆதித்யாமிக் விஸ்வாவித்லாயா மற்றும் வாரனேசியா சான்ஸ்கிரிட் விஸ்வாவித்யாலயா
9. பதாகான்வி சர்க்கார் வோர்ல்ட் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, பெல்காம்(கர்நாடகா)
10. செயின்ட் ஜான் யுனிவர்சிட்டி, கிஷாநட்டம் (கேரளா)
11. ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர் (மஹாராஷ்டிரா)
12. இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் (கொல்கத்தா, மே.வங்கம்)
13. இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் அன்ட் ரிசர்ச், தாக்கூர்புர்கூர், கொல்கத்தா (மே.வங்கம்)
14. வாரநாசியே சான்ஸ்கிரிட் வி்ஸ்வவித்யாலயா, வாரணாச (உ.பி.)
15. மகிளா கிராம் வித்யாபித்(மகளிர் பல்கலை)அலகாபாத் (உ.பி.)
16. காந்தி இந்தி வித்யாபித், அலஹாபாத் (உ.பி.)
17. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர் (உ.பி.)
18. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, அலிகார்க் (உ.பி.)
19. உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா கோசி கலன், மதுரா ( உ.பி.)
20. மஹாராணா பிரதாப் சிஷ்கா விஷ்வாவித்யாலயா, பிரதாப்கார்க் (உ.பி.)
21. இந்திரபிரசத் சிக்சா பரிசத், நொய்டா (உ.பி.)
22. நவபாரத் சிக்சா பரிசத், ரூர்கேலா (ஒடிசா)
23. நார்த் ஒடிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அன்ட் டெக்னாலஜ ி(ஒடிசா)
24. சிறீ போதி அகாடெமி ஆப் ஹையர் எஜுகேஷன், (புதுச்சேரி)