சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
2ஆம் இணைப்பு – சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி..
Apr 25, 2018 @ 06:59
சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜோத்பூர் சிறைக்கே சென்று நீதிபதி இத்தீர்ப்பை அளித்தார். ஆசாராம் பாபுவின் நண்பர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத்தின் சூரத், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
வட மாநிலங்களில் ஏராளமான ஆசிரமங்களை நிறுவியவர் சாமியார் ஆசாராம் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசாராம் பாபுவின் பாலியல்வன்முறை வழக்கின் தீர்ப்பு இன்று – டெல்லியில் பலத்த பாதுகாப்பு…
Apr 25, 2018 @ 02:59
ஆன்மிகவாதி ஆசாராம் பாபு மீதான பாலியல்வன்முறை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்த 75 வயதான ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தங்கி கல்விபயின்ற சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன. இதையடுத்து, வன்கொடுமை மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் ஆசாராம் பாபு கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தோடர்ந்து நான்காண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றிம் அறிவித்திருந்தது. ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு நீதிபதி சென்று தீர்ப்பளிக்கப்படுவதால் சிறைச்சாலையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது