161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் கனடாவில் வாகமொன்றை மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கைப் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் பத்து பேர் வரையில் உயிரிழந்திருந்தனர். ரொரன்டோ பௌத்த விஹாரையுடன் அடிக்கடி தொடர்பு பேணும் ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Spread the love