குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தின பொதுக்கூட்டத்தை எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியவர்களை நினைவு கூரவும் கௌரவிப்பதற்காகவும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட வைபவம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
மே தின கொண்டாடங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.(அத)