குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும், அமைச்சர் பதவிகளில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சிலரும் மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெற்றிடமாகியுள்ள அமைச்சு பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும் முன்னர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு அமைச்சு பதவிகளை வழங்குவது குறித்து இருத்தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
எதிர்வரும் மே 8 ஆம் திகதிக்கு முன்னர் இவர்களை அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு அதற்கு பின்னர் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எத்தனை பேர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள உள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.