233
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ் மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பின்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Spread the love