மதங்களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் விழாக்களை கொண்டாடுதல் எனும் தொனிப்பொருளில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு குறித்த தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றது.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின்; பணிப்பாளர் நாயகம் எம்.டி.ஜயசிங்க கலந்து கொண்டார்.
-மேலும் சர்வ மத தலைவர்கள்,திணைக்கள அதிகாரிகள் மன்னார் பிரதே சபையின் தலைவர் எம்.முஜாகீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் , மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.