குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய அனுமதிக்க முடியாது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி யினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினதும் வெளிநாட்டு சக்திகளினதும் தேவைக்கு ஏற்ற வகையிலேயே இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
ஏனைய அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் பிரதமரினால் சமஸ்டி முறைமை ஆட்சியை கொண்டு வர முடியவில்லை எனவும் இதனால் ஜே.வி.பி.யை பிரதமர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த 20ம் திருத்தச் சட்டத்தின் பாதிப்புக்கள் குறித்த மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.