முல்லைத்தீவு நகருக்கு வெளியில் வசித்து வரும் மக்கள் தற்போது குடிநீரை பெற்றுக்கொள்வதில் கடும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கேப்பாபிளவு, வட்டுவாகல், ஒட்டுச்சுட்டான் போன்ற பகுதியில் வசிக்கும் சுமார் 22 ஆயிரம் குடும்பங்கள் தமக்கான குடிநீரை பெற்றுக்கொள்ள குறைந்தது 3 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று வர வேண்டியுள்ளது. முல்லைத்தீவில் பல கிராங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை என பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவில் பல கிராமங்களில் வசிக்கும் குடிநீரை பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள் இல்லை. பிரதேசங்களில் கிணறுகள் இருந்த போதிலும் அவற்றிலும் தண்ணீர் வற்றி போயுள்ளது. இதனால், தாம் குடிநீருக்காக கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்