Home இந்தியா டெல்லி அணி 55 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது

டெல்லி அணி 55 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது

by admin


ஐ.பி.எல். தொடரில்,    டெல்லி அணி 55 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 26-வது போட்டி நேற்றையதினம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் போட்டியிட்ட நிலையில் நாயணச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்து 220 என்ற எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால், டெல்லி அணி 55 ஓட்ட வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றுள்ளது. ஆட்ட நாயகனாக டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவு செய்யப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More