தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது – தேசிய சமாதான பேரவை …
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் உள்முரண்பாடுகள், அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்த அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்பது தொடர்பில் மக்கள் ஐயப்பாட்டுடன் இருக்கின்றார்கள். காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
2015ம் ஆண்டில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு உறுதி வழங்கியதற்கு அமைய காணாமல் போனோர் அலுவலகம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் நிறுவப்பட உள்ளது . காணால் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட காணாமல் போனவர்கள் தொடர்பிலான மக்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பம் வரையில் நாடு தழுவிய ரீதியில் மக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகளுக்காக ஆளணி வளத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் நேர்கமுகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட கால மாறு நீதிப்பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. காலமாறு நீதிப்பொறிமுறைமை குறித்து நான்கு வாக்குறுதிகளை அரசாங்கம் அளித்த போதிலும், காணாமல் போனோர் அலுவலகம் மட்டுமே உருவாக்க்பபட்டு;ளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமேன கோரிக்கை விடுத்துள்ளது.