காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயி அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், நேற்று சனிக்கிழமை மாலை தீர்ப்பளித்த தனிநீதிபதி ராஜா, மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதியளித்திருந்தார். எனினும் இந்த அனுமதிக்கெதிராக தமிழக அரசு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.
தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் போராட்டம் நடத்த தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலதடை விதித்தது. மெரினாவில் போராட்டம் நடத்த ஒரு அமைப்பினருக்கு அனுமதி அளித்தால் பலரும் அனுமதி கேட்பார்கள் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மெரினாவில் போராட்டம் நடத்த அளிக்கப்பட்ட அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தினர்.