162
இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருமலையில் செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 20 தமிழர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர பிரதேசம் திருப்பதி திருமலையில் இன்று அதிகாலை செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட தமிழர்கள் காவல் நிலையம் அழைத்து சென்ற ஆந்திர காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love