குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழகத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு ஆயுதங்களை கடத்த முயற்சித்தனர் என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சசிகுமார், சுமாஸ்கரன், கிருஸ்ணகுமார் மற்றும் ரஜேந்திரன் ஆகியோருக்கு, ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி கயல்வழியினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஸ்ணகுமார் மற்றும் சுபாஸ்கரன் ஆகியோருக்கு பத்தாண்டு கால சிறைத்தண்டனையும் ராஜேந்திரனுக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனையும், சசிகுமாருக்கு ஆறு மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.